ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கொய்யாப்பழம் பறித்ததற்காக 4 வயது சிறுமி ஒருவரை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் படிக்கட்டில் கட்டி வைத்துத் தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது வீட்டு வாசலில் இருந்த மரத்தில் பழம் பறித்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், சிறுமியைத் தப்பிக்க முடியாதபடி கட்டிப்போட்டுள்ளார்.

அந்த வழியாகச் சென்ற ரோஹித் ஜெய்ஸ்வால் என்பவர் சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அவரை மீட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “அங்கிள் என்னை காப்பாற்றுங்கள்” என்று அந்தச் சிறுமி கதறி அழுவது பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.
<a href=”http://

“>

புலம் பெயர் தொழிலாளியின் மகளான அந்தச் சிறுமியைத் தாக்கிய ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.