இந்தியாவில் பிரபலமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி பட்ஸ் எஃப்இ இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதில் உள்ள சிங்கிள் டிரைவர் ஆடியோ சிஸ்டம் இரைச்சல் இல்லாத தெளிவான மற்றும் தரமான இசை அனுபவத்தை வழங்குகின்றது.

அதுமட்டுமல்லாமல்  ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 3 மைக்ரோஃபோன்கள், நீர் எதிர்ப்பு திறன் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இந்த கேலக்ஸி பட்ஸ் எஃப்இ -ல் உள்ளன. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 8.5 மணிநேரம் வரை பிளேபேக் வழங்குகிறது. உங்கள் மொபைல் போனுடன் ஃப்ளுடூத் மூலம் இதை கனெக்ட் செய்து கொள்ளவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.