உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணங்களின் வசதிக்காக பல அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தவிர டாக்குமெண்ட்ஸ், வாய்ஸ் மெசேஜ், வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் என பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வாட்ஸ்அப் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கூகுள் பே மற்றும் போன் பே மற்றும் பேடிஎம் போன்ற முன்னணி யு பி ஐ பேமெண்ட் வசதிகள் உடன் போட்டியிடக்கூடியதாக வாட்ஸ் அப் பேமென்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதி வாட்ஸ் அப் பயன்படுத்துவதற்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் பலர் இதனை பயன்படுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில் அதனை அப்டேட் செய்து மற்ற பண பரிமாற்றம் செய்யும் செயலியை போல வாட்ஸ் அப் மூலம் வணிகர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.