தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதம் முதல் ரேஷன் அட்டை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருடமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் முதல் மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப நிலையை அறிய விரும்பினால் பொது விநியோக துறையின் https://www.tnpds.gov.in/என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மின்னணு அட்டை விண்ணப்ப நிலை என்பதை அழுத்த வேண்டும். அடுத்ததாக திறக்கும் பக்கத்தில் குறிப்பு எண் பகுதியில் விண்ணப்பிக்கும் போது கைபேசி எண்ணுக்கு வந்த குறிப்பு எண்ணை பதிவிட்டால் உங்களுடைய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
