சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் மனை பிரிவு திட்டங்களை ஜி ஸ்கெயர் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இதில் விற்கப்படும் மனைகளை பயன்படுத்தி வணிகரீதியாக வருவாய் பெறுவதற்கும் இந்த நிறுவனம் பல சேவைகளை வழங்குகின்றது. இது போன்ற திட்டங்களில் மனை வாங்குவோர் அதில் வீடு கட்ட வேறு கட்டுமான நிறுவனத்தை தேடி செல்லும் நிலை உள்ளதால் இதற்கு தீர்வாக புதிய வசதியை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட் என்ற வசதியை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் மழைக்கான பட்டா பெயர் மாற்றுவதில் இருந்து அதில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து குடியேறும் வரை அனைத்து தேவைகளும் இதன் மூலமாக பூர்த்தி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் தங்கள் நிறுவனத்தின் 75 மனை பிரிவு திட்டங்களில் இந்த வசதியை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.gsquarehousing.com என்ற இணையதளத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.