செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சித்ததைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டத்தை முக்கியமான பிரச்சினையாக கொண்டு வர இருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் என்பது இந்துத்துவா செயல் திட்டத்தில் ஒன்று. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தி…. பெரும்பான்மை வாதத்தின் பெயரால் தங்களின் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வது ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளின் நோக்கம்.

யூனிபார்ம் Penal  கோடு இருக்கிறது, யூனிஃபார்ம் கிரிமினல் Procedure கோடு இருக்கிறது, யூனிபார்ம் Properties Act  இருக்கிறது, யூனிஃபார்ம் இண்டஸ்ட்ரியல் டிஸ்ட்ரிபியூட் Act  இருக்கிறது,  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். யூனிபார்ம் கோடு என்று தனி பொது சிவில் சட்டம் தேவையில்லை. கிறிஸ்தவர்களுக்கு தனி திருமண சட்டம் இருப்பதைப் போல, இஸ்லாமியர்களுக்கு தனி திருமண சட்டம் இருப்பதைப் போல, இந்துக்களுக்கும் ஹிந்து மேரேஜ் Act  இருக்கிறது.

ஹிந்து சக்சஷன் Act இருக்கிறது. இவை தனி சட்டங்கள், இவற்றை தான் பர்சனல் லாஸ் என்று அழைக்கிறோம், தனிச் சட்டங்கள்…  ஏதோ முஸ்லிம்களுக்கு மட்டும்தான் தனி சட்டங்கள் இருப்பதைப் போலவும்,  கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தான் தனி சட்டங்கள் இருப்பதைப் போலவும் ஒரு தோற்றத்தை திட்டமிட்டு பாஜகவினர்கள் – ஆர்.எஸ்.எஸ் கும்பலை சார்ந்தவர்கள் பரப்புகிறார்கள்.இஸ்லாமியர்களாக இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும், சீக்கியர்களாக இருந்தாலும், பாஷியர்களாக இருந்தாலும், பௌத்தர்கள்,  சமணர்கள்,  இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான Penal  கோடு இருக்கிறது.

எல்லோருக்கும் பொதுவான சட்டம். இந்த தனி சட்டங்களை தவிர மற்ற அனைத்து சட்டங்களும் இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் –  கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். தனிச் சட்டங்கள் இஸ்லாமிய – கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்துக்களுக்கு உண்டு. இந்த உண்மையை மறுத்துவிட்டு,  ஏதோ இஸ்லாமியர்களுக்கும் – கிறிஸ்தவர்களுக்கும் மட்டும்தான் சிறப்பான சட்டம் இங்கே இருப்பதை போலவும்,  அதனால் இங்கு பாகுபாடு இருப்பதை போலவும் ஒரு தவறான மாயையை உருவாக்க பார்க்கிறார்கள்.

இது வன்மையான கண்டனத்திற்குரியது. அதிமுகவும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் என்ற அறிவிப்பு வரவேற்க தகுந்தது. அவர்கள் எந்த நோக்கத்திற்காக இதை அறிவித்திருக்கிறார்கள் என்று நமக்கு தெரியாது. அவர்களுக்குள் கூட்டணியில் குழப்பம் இருக்கலாம், கூட்டணியிலே அவர்களுக்கிடையே சிக்கல் ஏதேனும் எழுந்து இருக்கலாம். இதை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி பாஜக பணிய வைப்பதற்கு இதை அவர்கள் யுக்தியாக கூட கையாளலாம். ஆனாலும் கூட பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போம் என்று அதிமுக எடுத்திருக்கிற முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று பாராட்டுகிறது.