அமெரிக்காவில் மூளையை தின்னும் அரியவகை நோயான அமீபா நோய் பரவி வருகின்றது. நெய்லேரியா பவுலேரி என்ற தொற்று மூலமாக இந்த நோய் ஏற்படுகின்றது. இந்த நோய் மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை நேரடியாக தாக்கும். அதனால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏரி மற்றும் குளம் போன்றவற்றில் வாழும் அமீபா மூலம் இந்த நோய் பரவக்கூடும்.

அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போது மூக்கு வழியாக இது உடலுக்குள் சென்று நோயை ஏற்படுத்தும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, கடுமையான தலைவலி, தூக்கமின்மை, சுவையில் மாற்றம் மற்றும் மாறுபட்ட மனநிலை ஆகியவை ஏற்படும்.அமெரிக்காவில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நிவேடா என்ற பகுதியை சேர்ந்த உட்ரோ டர்னர் என்ற இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.