காரைக்குடியில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பாணியில் அதிரடியாகப் பேசினார். மற்ற அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளுக்காகப் பணம், காசு மற்றும் தங்கத்தைச் சேர்த்து வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதாகச் சாடிய அவர், தாங்கள் மட்டும் தான் அடுத்த தலைமுறை சுவாசிக்க நல்ல காற்றையும், குடிக்க நல்ல நீரையும் மிச்சம் வைத்துப் போக வேண்டும் என நினைப்பதாகத் தெரிவித்தார்.

​மேலும், தற்போதைய அரசியல் சூழலை நக்கலாகக் குறிப்பிட்ட அவர், “நானும் ஒரு டோக்கனை வாங்கிட்டுப் போய் ஐயா கிட்ட கொடுத்து, எனக்கும் முதலமைச்சர் பதவியைக் கொடுங்கன்னு கேட்கப் போறேன்” என்று கூறி மேடையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார். சீமானின் இந்த எள்ளல் கலந்த பேச்சு அவரது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.