2026 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைக்கத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆர்வம் காட்டியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து சில முக்கிய முகங்களைத் தவெக பக்கம் இழுத்தாலும், தினகரனின் வரவு ஒரு மிகப்பெரிய ‘கேம் சேஞ்சராக’ இருக்கும் என விஜய் தரப்பு நம்பியது. ஆனால், நேற்று (ஜனவரி 21, 2026) டிடிவி தினகரன் திடீரென பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) ஐக்கியமாகிவிட்டார்!

​டிடிவி தினகரன் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணிக்குத் திரும்பியது தவெக தரப்பில் ஒரு சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. “பங்காளிச் சண்டை இப்போதைக்கு வேண்டாம்” என முடிவெடுத்து தினகரன் விலகியதால், தவெக இப்போது தனது கூட்டணி வியூகத்தை முற்றிலுமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள மற்ற சிறிய கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் ஆதரவைத் திரட்ட விஜய் புதிய ஸ்கெட்ச் போட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.