தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக பொறுப்புகளில் மாற்றம் செய்து பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி பொறுப்பாளராக அஜோய் குமார் கூடுதலாக கவனிப்பார் என கே. சி வேணுகோபால் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக பொறுப்புகளில் மாற்றம் செய்து பொதுச்செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

உத்திரபிரதேசம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக அவினாஷ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கருக்கு சச்சின் பைலட், மகாராஷ்டிராவுக்கு ரமேஷ் சென்னி தலா காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஆக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா, அந்தமான் நிகோபார் பகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.