சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், துபாயில் கடலின் நடுவில் கட்டப்பட்ட ஆடம்பரமான வீட்டைக் காட்டியுள்ளார். வீடியோவில் அந்த வீடு எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதையும், உள்ளே உள்ள அறைகள், சமையலறை, குளியலறை எல்லாமே லக்ஷுரி ஸ்டைலில் அமைந்துள்ளதையும் காணலாம். ஆனால், இறுதியில் அந்த வீட்டின் விலை கேட்கப்பட்டவுடன் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த வீட்டின் விலை சுமார் 92 கோடி ரூபாய் என்று  வியாபாரி தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ X -இல் @HasnaZaruriHai என்ற ஐடியிலிருந்து பகிரப்பட்டிருக்கிறது. அதில், “99% தள்ளுபடி கொடுத்தாலும் கூட இந்த வீட்டை வாங்க முடியாது” என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது. ஒரு நிமிட நீளமான இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

“>

 

பலரும் நகைச்சுவையாக கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒருவர், “100% தள்ளுபடி கொடுத்தாலும் கூட நான் வாங்க முடியாது” என்று எழுதியுள்ளார். இன்னொருவர், “சகோதரா, எனக்கு கடன் கொடுங்கள், என் வாழ்நாள் முழுவதும் அதை செலுத்திக்கொண்டே இருப்பேன்” என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர், “நான் இந்த வீட்டை 5 ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன், இன்னும் விற்கப்படவில்லை” என்று சிரிப்பூட்டும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.