கேரளா மாநிலம் அடூரில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ஃபேன்சி டிரஸ் போட்டியில், ஒரு மாணவரின் நகைச்சுவையான வேடம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீக்கோழி போலவே பெரிதாக்கப்பட்ட அலகு, வண்ணமயமான இறக்கைகள், நீண்ட கால்கள் உடையணிந்து மேடையில் நுழைந்த அந்த மாணவர், தனது அசைவுகள் மற்றும் வேடிக்கையான நடிப்பால் பார்வையாளர்களை சிரிப்பில் மூழ்கடித்தார். கூடுதலாக, முட்டையிட்டது போல நடித்த தருணம் அனைவரையும் சிரிப்பில் சிக்க வைத்தது.
இந்த அற்புதமான தருணத்தை கைலாஷ் ஆர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி பகிர்ந்தார். மிகச் சில நாட்களில் இந்த வீடியோ 28 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், ஏழு லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. காணொளியின் இறுதியில், பெரிய தீக்கோழி உடையின் காரணமாக மாணவருக்கு நடப்பதில் சிரமம் ஏற்பட்டதால், ஆசிரியர் ஒருவர் மேடையில் வந்து உதவி செய்த காட்சி கூட சிரிப்பை கிளப்பியுள்ளது.
View this post on Instagram
“>
இன்ஸ்டாகிராம் பயனர்கள், குழந்தையின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் அசாதாரணமான காமெடி டைமிங்கை பாராட்டி வருகின்றனர். “இது எல்லாம் பள்ளி நிகழ்ச்சியா… இல்லேன்னா ஸ்டாண்ட்-அப் காமெடியா?” என்று ஒருவர் கருத்து பதிவுசெய்துள்ளார். பலர், “அந்தக் குழந்தையின் தீக்கோழி நடிப்பு எங்கள் நாளையே மகிழ்ச்சியாக்கிவிட்டது” எனக் கூறி வீடியோவை பரவலாக பகிர்ந்து வருகின்றனர். இதனால், இந்த தீக்கோழி மாணவன் இப்போது இணையத்தில் வைரல் ஸ்டாராக மாறியுள்ளார்.
