சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில், ஒரு பெண் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது, அருகில் இருந்த டாக்ஸி ஓட்டுநர் சரியான நேரத்தில் பெண்ணின்  தலைமுடியைப் பிடித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். ஒரு நொடி கூட தாமதமானால் அந்தப் பெண்ணை காப்பாற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்த காட்சியைப் பார்த்தவர்கள் அனைவரும் மூச்சு பிடித்து பார்த்துள்ளனர்.

வீடியோவில் அந்தப் பெண் பாலத்தின் மேல் அமர்ந்து குதிக்க முயல்வதை காணலாம். அவள் கீழே குதிக்கத் தொடங்கியவுடன், டாக்ஸி ஓட்டுநர் வேகமாக ஓடி வந்து அவளது தலைமுடியைப் பிடித்து தடுக்கிறார். அதன்பின், போலீசார் அங்கு விரைந்து வந்து அந்தப் பெண்ணை மேலே இழுத்து பாதுகாப்பாக வைத்தனர். இந்த சம்பவம் நடந்த இடம் மற்றும் அந்தப் பெண் யார் என்பதற்கான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

“>

 

52 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டு, பலர் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர். ” , “டாக்ஸி ஓட்டுநர் உண்மையிலேயே ஒரு ஹீரோ. அவர் உயிரைக் காப்பாற்றினார்” என்று பலரும் கூறிவருகின்றனர்.