சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. ஒரு பெண் தெருவோரத்தில் பழம் விற்றுக் கொண்டிருந்த நபரிடம் , “கடைசியாக எப்போது அழுதீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில், இணையத்தில் பல கோடி மக்களின் கண்களைக் கண்ணீரால் நனைக்க வைத்தது. இந்த வீடியோவை இதுவரை 7 கோடியே அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அந்த நபர்  தனது கதையை பகிரும்போது, “நான் 8 வருடங்கள் காதலித்து வந்தேன். அவளை திருமணம் செய்ய விரும்பினேன். ஆனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. அதனால் எங்கள் உறவு முறிந்தது. அதற்குப் பிறகுதான் கடைசியாக நான் அழுதேன்,” என்று கூறினார். மேலும், “இப்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். ஆனாலும் உண்மையான காதலை மறப்பது எளிதல்ல,” என்றும் அவர் உருக்கமாக தெரிவித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by SOULSHINE🌻 (@_.soulshine)

“>

இந்த உணர்ச்சிவசமான வீடியோவை @soulshine என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது.நபரின் எளிமையும், அவர் சொன்ன வார்த்தைகளும் நெட்டிசன்களின் இதயத்தைத் தொட்டுவிட்டன. அந்த வீடியோ 90 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. கருத்துப் பகுதியில் பலரும் “மாமா என்னை அழ வைத்தார்”, “சிரிப்புக்குப் பின்னால் வலியை உணருங்கள்”, “மாமாவின் துக்கம் இன்னும் குறையவில்லை” என்று உணர்ச்சிகரமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.