இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரத்தில், சமூக வலைதளங்களில் பல உணர்ச்சி மிகுந்த தருணங்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் பெரும் கவனம் பெற்றிருப்பது, தேசிய விலங்கு புலி மற்றும் தேசியப் பறவை மயில் ஒன்றாகக் காட்டுப் பாதையில் நடந்து செல்வது.

“>

 

இயற்கை ஆர்வலரான ராகேஷ் பட் இந்த காட்சியை பதிவு செய்தார். அதை பின்னர் தலைமை வனப் பாதுகாவலர் டாக்டர் பி.எம். தகாதே (IFS) தனது X பக்கத்தில் பகிர்ந்து, “தேசியத்தின் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தும் அபூர்வ தருணம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிட்டார்.

“>

 

சுமார் 20 விநாடிகள் நீளமான இந்த வீடியோவில், புலியும் மயிலும் அமைதியாகப் பாதை ஒன்றை பகிர்ந்து நடப்பது காட்சியளிக்கிறது. “இது தேசியத்தின் பல்வகைமைக்கும், இயற்கையின் அற்புத ஒற்றுமைக்கும் சின்னம்” என்று சமூக வலைதள பயனர்கள் பாராட்டினர். “புலி அருகே மயில் சுதந்திரமாக நடப்பது – மிக அபூர்வ காட்சி” என சிலர் கருத்து தெரிவித்தனர். “இந்த சுதந்திர தினத்தில், இந்தியாவின் வளமான இயற்கை பாரம்பரியத்திற்கு சரியான அஞ்சலி” என இன்னொருவர் பதிவு செய்தார்.