டெல்லி-என்சிஆர் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை திடீரென ஒரு தெருநாய் கடுமையாகத் தாக்கியது. வீடியோவில், நாய் முதலில் சிறுவனின் காலில் பாய்ந்து கடிக்கிறது. பயந்து தப்பிக்க முயன்ற சிறுவன் கீழே விழ, அதே நேரத்தில் நாய் அவனை விட்டு பிரியாமல் விடாமல் ற்களால் இறுக்கமாகக் கடித்துக்கொண்டே இருந்தது. வலியால் சிறுவன் துடித்து கத்திக் கொண்டிருந்த காட்சி இதயத்தை பதறவைக்கிறது.

அந்த நேரத்தில் அருகே சென்ற ஒரு பெண் சிறுவனை காப்பாற்ற முயன்றார். ஆனால் நாய் சிறுவனை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தது. பின்னர் அங்கு பலர் கூடி வந்து அவனை மீட்க முயன்றனர். சிறுவனின் உயிரை காப்பாற்றிய அவர்கள், மிகுந்த சிரமத்துடன் நாயை பிரித்தனர். இந்த சம்பவத்தின் முழு காட்சியும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

“>

 

இந்த வீடியோவை ட்விட்டரில் @swetasamadhiya பகிர்ந்துள்ளார். “நாய் ரசிகர்களே, ரேபிஸ் காரணமாக எத்தனை பேர் உயிரிழக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்ட இந்த காட்சி, இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. பலரும் கருத்து தெரிவித்து, தெருநாய்களை உடனடியாக காப்பகங்களில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சிலர், “இத்தகைய சம்பவங்கள் தினசரி நடந்துகொண்டே இருக்கின்றன, அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளனர்.