அசாமின் குவஹாத்தி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை காட்டு யானை ஒன்று திடீரென தாக்கியது. இந்த சம்பவம் அம்சாங் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. யானை தனது தும்பிக்கையாலும், தலையாலும் காரை பல முறை அடித்ததால், கார் கடுமையாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வீடியோவில் யானை மிகுந்த கோபத்துடன் காரைத் தாக்கும் காட்சி தெளிவாக தெரிகிறது. சில சமயங்களில் அது காரை கவிழ்த்துவிடும் அளவுக்கு வலிமை காட்டியது. தகவலின்படி, அந்த யானை பல நாட்களாக அம்சாங் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளது. அதின் ஒரு காலில் காயம் ஏற்பட்டதால் வலி காரணமாக அது கோபமாக நடந்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
In the Amchang-Jorabat area of Guwahati, an elephant with an injured leg has been causing havoc in the Amchang, Jorabat, and Satgaon areas for the past few days. Yesterday, in a fit of rage, it attacked a car and damaged it, although no human was injured in the incident. pic.twitter.com/a5hINPYqDt
— Ritesh Mahasay (@MahasayRit11254) August 14, 2025
“>
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ X- பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. யானையின் காயம் குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, யானைக்கு சிகிச்சை அளித்து, மீண்டும் காடு நோக்கி அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
