தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்தப் படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் நடிகர் பிரபாஸுக்கு அதிக வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகர் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே, சலார், ஆதிபுருஷ் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் வசித்து வரும் வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் பிரபாஸ் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். மேலும் நடிகர் பிரபாஸின் வீடு சுமார் 60 கோடியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.