ஓம் ரனாவத் டைரக்டில் பிரபாஸ் நடித்து நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. ராமாயணத்தை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆன இப்படம் சற்று மோசமான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

படம் நல்லா இல்லை என்று பெரும்பான்மையான ரசிகர்கள் கூறினர். இந்த நிலையில் மோசமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஆதிபுருஷ் படம் உலகளவில் ரூ.140 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்திருக்கிறது. இது இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் கிராண்ட் ஓபனிங் என சொல்லப்படுகிறது.