கற்றது தமிழ், அங்காடித்தெரு திரைப்படங்கள் வாயிலாக தமிழ் திரையுலகில் அதிகம் பிரபலமானவர் அஞ்சலி. அவர் நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. முன்னணி ஹீரோ படங்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தன் ரோலுக்கு தகுந்த முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களாக அஞ்சலி தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இப்போது அஞ்சலி ஒரு திரைப்படத்திற்கு அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையிலும் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு ஹைதராபாத்தில் 1 வீடு மற்றும் சென்னையில் 1 வீடு வாங்கி வைத்திருக்கிறாராம். அதோடு அவரிடம் 2 சொகுசு கார்களும் இருக்கிறது. அஞ்சலியிடம் சுமார் 10 கோடி ரூபாய்கும் அதிகமாக சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் ஒரு பிரபல ஹீரோவுடன் காதலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பிரேக்கப் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.