தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இப்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லியோ திரைப்படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு டைரக்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் தளபதி-68 படத்தில் விஜய் நடிக்கிறார். யுவன் இசையமைக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது.

இதுவரையிலும் இந்த படத்திற்கு பூஜை கூட போடாமல் இருக்கும் நிலையில், புது சிக்கல் ஒன்று கிளம்பி உள்ளது. தளபதி-68 படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. ஆகவே கண்டிப்பாக இப்படத்தின் பட்ஜெட் நினைத்துக்கூட பார்க்க முடியாத தொகையாக இருக்கும்.

இதனால் தளபதி-68 திரைப்படத்தின் டிக்கெட் விலையும் 2000, 3000 ரூபாய்கு விற்கப்பட வாய்ப்புள்ளது. இதை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்யக்கூடாது எனவும் தளபதி 68 திரைப்படத்தின் டிக்கெட் ரூ.120-க்கு மட்டுமே விற்கப்பட வேண்டும் எனவும் கூறி பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது. இதை தளபதி-68 படக்குழு எப்படி சரிசெய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.