பிரபல மலையாள நடிகர் குந்தர ஜானி (71) திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக, மம்மூட்டி, மோகன்லால், கமல் மற்றும் தமிழில் அஜித் (கிரீடம்) உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்