பிரபல மலையாள நடிகர் குந்தர ஜானி (71) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மம்மூட்டி, மோகன்லால், கமல் மற்றும் தமிழில் அஜித் நடித்த கிரீடம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.