விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘லியோ’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி அரசு அறிவித்த படி காலை 9 மணிக்கே தொடங்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. நேற்று தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி உள்துறை செயலாளரிடம் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், 7 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 4 மணி காட்சிக்கு அனுமதி தர முடியாது என்றும், 7 மணி காட்சிக்கு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கவும் தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.