மீரட் பல்லவபுரம் பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் ஜோதி என்ற பெண்ணை தாக்கி, அவரது முகத்தில் மூடியிருந்த துணியை அகற்றி, ஸ்ப்ரே தெளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆகஸ்ட் 26 அன்று, ஜோதி பார்லரில் முகத்தை அழகுபடுத்த சென்றபோது, பார்லர் உரிமையாளர் ஷோபாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜோதியைத் தாக்கியதோடு, ஒருவர் அவரது முகத்தில் இருந்த துணியை அகற்ற முயன்றார்.

மற்றொரு பெண் ஸ்ப்ரேயை எடுத்து ஜோதியின் முகத்தில் அடித்துள்ளார். இந்தச் சம்பவத்தை யாரோ வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். பல்லவபுரம் காவல்துறை, வீடியோவை ஆய்வு செய்து, ஷோபாவின் கணவர் ஆலோக் மற்றும் கவுரவ் குமார் என்ற இருவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று ஷோபா கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜோதி மீது திருட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.