பீகாரில் ஒரு பயிற்சி மைய ஆசிரியர் தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதைத் தடுக்க கையாண்ட விசித்திரமான முறை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக வகுப்பறைகளில் தேர்வுகள் நடக்கும் சூழலில், இந்த ஆசிரியர் தனது மாணவர்களைச் சாலையோரத்தில் ஒருவருக்கொருவர் அதிக இடைவெளி விட்டு அமர வைத்துத் தேர்வை நடத்தியுள்ளார்.
மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்து விடை எழுதுவதைத் தவிர்க்கவும், தேர்வில் முழுமையான நேர்மையைக் கடைபிடிக்கவும் அவர் இந்த நூதன முறையைப் பயன்படுத்தியுள்ளார்.
சாலையோரத்தில் அமர்ந்திருந்தாலும், மாணவர்கள் எவ்வித சலனமுமின்றி அமைதியாகவும் ஒழுக்கமாகவும் தேர்வு எழுதுவதை அந்தக் காணொளி காட்டுகிறது. ஆசிரியரின் இந்த அர்ப்பணிப்பையும், குறைந்த வசதிகளைக் கொண்டு அவர் உருவாக்கிய நேர்மையான சூழலையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
“>
கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் மட்டுமல்ல, அது ஒழுக்கத்தையும் நேர்மையையும் உள்ளடக்கியது என்பதை இந்தச் சம்பவம் நிரூபிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
