வங்காளதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நாயின் முதுகில் பெட்ரோல் டேங்கைச் சுமந்துகொண்டு பெட்ரோல் நிலையத்திற்கு வரும் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அந்த நாய் எவ்வித பதற்றமும் இன்றி அமைதியாக இருக்க, அதன் உரிமையாளர் மிகவும் சாதாரணமாக பெட்ரோல் போட முயற்சிக்கும் காட்சி பார்ப்பவர்களைச் சிரிக்க வைப்பதோடு வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

“வங்காளதேசம் ஆரம்பநிலையாளர்களுக்கானது அல்ல” எனப் பலரும் இந்த விசித்திரமான முறையை நகைச்சுவையாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.

முதல் பார்வையில் இது வேடிக்கையாகத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் உலகளாவிய எண்ணெய் விநியோக நெருக்கடி என்ற கசப்பான உண்மை ஒளிந்திருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடும் விலை உயர்வும் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் இதுபோன்ற மாற்று வழிகளை யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by bhartiyalast24hrr (@bhartiyalast24hrr)

“>

ஒரு நாட்டின் இக்கட்டான சூழ்நிலையை இந்தச் சிறு காணொளி நகைச்சுவையோடும் அதே சமயம் சிந்திக்க வைக்கும் விதமாகவும் வெளிப்படுத்தியுள்ளது.