‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று காத்திருந்த ஓ. பன்னீர்செல்வம், இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த விசேஷ நாளில், தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் மற்றும் கூட்டணி குறித்த அதிரடி அறிவிப்பை அவர் வெளியிடப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இதுவரை எந்தக் கூட்டணியிலும் இணையாமல் மௌனம் காத்து வந்த ஓபிஎஸ், மீண்டும் பாஜக-வுடன் கைகோர்ப்பாரா அல்லது யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) பக்கம் சாய்வாரா? என்ற கேள்வி தமிழக அரசியலில் தீயாய் பரவி வருகிறது. இதற்கான விடை இன்று கிடைத்துவிடும் என்பதால், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்து வருகின்றனர்.
