பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ் சீசன் 9’ நிகழ்ச்சி அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் நாளிலிருந்து பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது கண்டனத்தையும், அரசு நடவடிக்கையைப் பற்றிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “பிக்பாஸ் நிகழ்ச்சி சமூகத்திற்கு எந்த ஒரு நல்ல செய்தியையும், மரபு பண்பாட்டையும் வழங்குவதில்லை. இது வெறும் காமெடி, சண்டை என்ற பெயரில் தரக்குறைவான நிகழ்வுகளால் நிரம்பியுள்ளது.
இது பார்க்கவே முடியாது என பொதுமக்கள் பலரும் எங்களை தொடர்பு கொண்டு புகாரளிக்கின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் பிக்பாஸ் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம்” எனக் கூறினார். இந்த கருத்துக்கூறுகள் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன
