தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகையாக இருப்பவர் ஆர்த்தி கணேஷ். இவர் நடிகர் தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை ரவீந்திரன் தற்போது உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 83.
இவர் தலைமைச் செயலகத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளின் தனி செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் அவர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மரணம் அடைந்தார். மேலும் அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
