கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் அதனை வரவேற்கும் விதமாக தனித்துவமான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. தலைநகர் புடாபெஸ்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த ஓட்டப் போட்டியில் பங்கேற்றவர்கள் வழக்கமான விளையாட்டு உடைகளை தவிர்த்து, நீச்சல் உடைகளுடன் கிறிஸ்துமஸ் தாத்தா போல் அலங்கரித்து ஓடினர். கடும் குளிர் நிலவிய போதும், பங்கேற்பாளர்கள் உற்சாகத்துடன் ஓட்டத்தை நிறைவு செய்தனர்.
https://x.com/i/status/2000268298949169512
ஓட்டத்தின் போது, அவர்கள் செல்லும் பாதையில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் மிட்டாய்களை வழங்கி பண்டிகை மகிழ்ச்சியை பகிர்ந்தனர். குளிரின் தாக்கத்தை குறைக்கும் வகையில், இடையிடையே நின்று உடலை சுறுசுறுப்பாக்கும் பயிற்சிகளையும் செய்தனர்.
மேலும், கிறிஸ்துமஸ் வருகையை கொண்டாடும் வகையில் பாடல்கள் பாடி, நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சி நகர மக்களிடையே பண்டிகை சூழலை மேலும் உயிர்ப்பூட்டியதாக அமைந்தது.
