லுகாஸ் ஸஸ்புனர் என்பவர் பனியுடன் நேரடி முழு உடல் தொடர்பில் அதிக நேரம் செலவிட்டதற்கான உலக சாதனையை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடும் குளிர்காலத்தில் மக்கள் குளிர்ந்த நீரைக் கூடத் தொடத் தயங்கும் நிலையில், இவர் இந்த அசாதாரண சாகசத்தில் ஈடுபட்டார்.

வெறும் காற்சட்டை  அணிந்தபடி, இவர் பனிக்குவியலில் படுத்துக்கொண்டு, கழுத்து மற்றும் தலைப் பகுதியைத் தவிர மற்ற முழு உடலையும் பனிக்குள் மூடிக்கொண்டார். தனது உடலில் நடுக்கம் ஏற்பட்டபோதும், இவர் இரண்டு மணிநேரம் 30 வினாடிகள் வரை பனிக்கட்டிக்குள் இருந்ததன் மூலம், ஒரு புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Guinness World Records (@guinnessworldrecords)

“>

இவரது சவாலான இந்த முயற்சி தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். இதைப் பார்த்த இணைய பயனர்கள், இது ‘பைத்தியக்காரத்தனமும், தைரியமும் கலந்த ஓர் அரிய கலவை’ என்று புகழ்ந்துள்ளனர்.

அதேசமயம், சிலர் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து கருத்துக்களைப் பதிவிட்டனர். உலக சாதனைகளை அடைவதற்காக மக்கள் எந்தளவு எல்லைக்குச் செல்வார்கள் என்பதை இந்தச் செயல் நிரூபிப்பதாக அமைந்துள்ளது.