பாலியல் சீண்டலில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்காக இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது நேரடி குறுஞ்செய்திகளில் direct message யாராவது நிர்வாண புகைப்படங்களை அனுப்பினால் தானாகவே படங்கள் மங்கலாகும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை இன்ஸ்டாகிராம் வடிவமைத்துள்ளது.

புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேலும் பல புதிய அம்சங்களை சோதித்து வருவதாகவும் குற்றவாளிகள் பதின்ம வயதினரை தொடர்பு கொள்வதை இது கடினமாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.