கூகுள் நிறுவனம் ஃபைண்ட் நைஸ் டிவைஸ் என்ற புதிய அம்சம் ஒன்றை ஆண்ட்ராய்டு மொபைலில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக தொலைந்து போன ஆண்ட்ராய்டு கருவிகளை விரைவில் பாதுகாப்பாக கண்டறிய முடியும். இது முதலில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிப்பை இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் விரைவில் இந்த அம்சம் பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பொறியியல் துறை துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இதை எப்படி செயல்படும் என்ற விளக்கத்தையும் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.