உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

‘Meta AI’ என்ற சிறப்பு AI-இயங்கும் சாட்போட்டை அறிமுகப்படுத்தியது. இந்த AI சாட்போட் மூலமாக பயனர்கள் வேடிக்கையாக அரட்டையடிக்கலாம் அல்லது தங்களுக்குப் பிடித்த கேள்விகளைக் கேட்கலாம். Llama தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த meta AI தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. இந்த அம்சம் சில பயனர்களுக்கு மட்டுமே தெரியும்.