உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் UK இன் ஆன்லைன் பாதுகாப்பு இயக்கம் சார்பாக குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தன்மை இருக்க வேண்டும் என்பதால் மெட்டாவிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு மெட்டா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் UK இன் ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான மெட்டாவின் எதிர்ப்பை தொடர்ந்து whatsapp குறைந்தபட்ச வயதை 16 முதல் 13 வரை குறைக்கிறது.

இந்த மாற்றத்திற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருந்தாலும் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் தளத்தை பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அனுமதிப்பது, குழந்தைகளின் பாதுகாப்பை பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள பயணர்களின் குறைந்தபட்ச வயதை 16இல் இருந்து 13 ஆக whatsapp குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.