மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், தனது மனைவியின் அந்தரங்க வீடியோக்களை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றிய ஷிவம் சாஹு என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் பட உலகில் நட்சத்திரமாக (Porn Star) வேண்டும் என்ற விபரீத ஆசையில், கடந்த டிசம்பர் மாதம் தனது மனைவியின் வீடியோவை ரகசியமாகப் படம்பிடித்து, அதனைச் சமூக வலைதளங்களிலும், உறவினர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இது குறித்து மனைவி கேட்டபோது, அவரை மேலும் அவமானப்படுத்துவேன் என்று மிரட்டியுள்ளார்.

​கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் திருமணமான நிலையில், வரதட்சணை கொடுமையிலும் அந்த நபர் ஈடுபட்டு வந்துள்ளார். வீடியோ விவகாரம் பெரிதானதும் மும்பைக்குத் தப்பி ஓடிய அவர், பிப்ரவரி 12-ம் தேதி தனது மாமனார் வீட்டுக்கு ஆயுதங்களுடன் வந்து மிரட்டல் விடுத்தபோது காவல்துறையினரால் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டார். தற்போது அவர் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.