உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், யாரும் எளிதில் நம்ப முடியாத அளவிற்கு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 34 வயதான நனகை என்ற கர்ப்பிணிப் பெண், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடுமையான பிரசவ வலியால் துடித்துள்ளார். வலியின் உச்சக்கட்டத்தை தாங்க முடியாமல், அந்தப் பெண் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துத் தனது வயிற்றைத் தானே கிழித்துக் கொண்டு குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.

​அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர். 6 மாதங்களுக்கு முன்பே தனது கணவரை இழந்த அந்தப் பெண், வேறு வழியின்றி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்போது அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் லக்னோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். வயிற்றில் இருந்து கத்தியால் எடுக்கப்பட்ட அந்தப் பெண் குழந்தை முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.