மும்பையில் உள்ள கஞ்சுர்மார்க் எம்.எம்.ஆர்.டி.ஏ காலனி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுமார் மதியம் 12.30 மணி அளவில் ஒரு சிறுவன் தனது சிறிய சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டிருந்தார்.

அப்போது கையில் வைத்திருந்த விளையாட்டுப் பொருள் கீழே விழுந்ததை கவனித்த சிறுவன் மெதுவாக சென்று சாலையில் அமர்ந்து அதனை எடுக்க முயல்கிறார். அதே நேரத்தில் ஒரு சாம்பல் நிற சான்ட்ரோ கார் அந்த குறுகிய தெருவில் படிப்படியாக திரும்புகிறது. சிறுவன் சாலையில் அமர்ந்து பொருளை எடுக்கும் போது கார் ஓட்டுநர் அதனை கவனிக்காமல் சிறுவன் மீது இடித்ததில் சிறுவன் காரின் முன் டயரில் சிக்கிக்கொண்டார்.

உடனே அங்கிருந்த உள்ளூர்வாசிகள் உடனடியாக காரை அகற்றி குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது சிறுவர் கடுமையான காயங்களில் இருந்து மீண்டு வருகிறார் என கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சிலர் பெற்றோர், ஓட்டுநரின் கவன குறைவும், பொறுப்பற்ற தன்மையும் குறித்து விமர்சித்து வருகின்றனர்.