உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் கடந்த புதன் கிழமை பிரபல ஜீ நியூஸ் தொகுப்பாளினி பூஜா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அந்த பதிவில், தான் பட்டப் பகலில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பின்னிருந்து தொடர்ந்த மூன்று பேர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், அவர்களை தனது தொலைபேசி கேமராவில் படம் பிடிக்கும் என்ற போது அவர்கள் சென்ற பைக்கின் நம்பர் பிளேட்டை பின் இருந்த நபர் ஹெல்மெட்டால் மறைக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Noida: In the broad daylight, I was followed & harassed by 3 men on a bike.
When I pulled out my phone, they tried to cover the number plate with a helmet.@myogiadityanath ji, @Uppolice please take action. This is Uttar Pradesh & women will NOT be intimidated.#WomenSafety pic.twitter.com/MNQX1Kdddi— Pooja (@_poojaLive) August 13, 2025
ஆனால் அவர் மறைப்பதற்கு முன்பாகவே அந்த பைக்கின் நம்பர் பிளேட் தெளிவாக வீடியோவில் பதிவாகியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் அவரது பதிவை பகிர்ந்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
