உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி சோஹில். இவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது காவல்துறையினரிடம் கழிவறைக்கு சென்று வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்போது காவல் நிலைய கழிவறையை பயன்படுத்த சென்ற வாய்ப்பை பயன்படுத்தி காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனே காவல் துறையினர் அவரை துரத்திச் சென்றுள்ளனர் அப்போது ஒரு தெருக்களின் இடையே குற்றவாளி தப்பி ஓடிய போது காவல்துறையினர் மற்றும் தெருவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் அருகில் இருந்த சிலர் குற்றவாளியை பிடிக்க காவலர்களுடன் இணைந்து ஈடுபட்டனர்.
A suspect in kidnapping case fled from police custody in Pilibhit district of Uttar Pradesh. CCTV footage of suspect trying to escape in an alley with two people trying to confront him after chasing cops raised alert has surfaced. The cop chashing gave up after a point. pic.twitter.com/Jugrwor6si
— Piyush Rai (@Benarasiyaa) August 13, 2025
நீண்ட நேர துரத்தலுக்கு பின் கைது செய்யப்பட்ட சோஹில் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் கடத்தல் தொடர்பான விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது எனவும் காவல் துறையினரின் கவனக்குறைவால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதால் தகுந்த காவல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.எஸ்.பி விக்ரம் தஹியா உறுதியளித்துள்ளார்.
