இந்தியா மொத்தக் கூட்டணியின் “வோட் சோரி” போராட்டத்தின் போது திரிணாமூல் காங்கிரஸ் (TMC) எம்.பி. மஹுவா மொய்த்ரா மயங்கி விழுந்த சம்பவமும், பின்னர் கூட்டத்தினருக்கு முத்தம் வீசிய காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது, டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட மஹுவா மொய்த்ரா, பஸ் உள்ளே மயங்கி விழுந்தார். அப்போது பிற பெண் எம்.பிக்கள் அவரை எழுப்ப முயன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
— Sagarika Ghose (@sagarikaghose) August 11, 2025
அந்த வீடியோவில், மயங்கி கிடந்த மஹுவா திடீரென பஸ் ஜன்னலுக்கு வெளியே பார்த்து சிரித்து, கூட்டத்தினருக்கு அல்லது கேமராவுக்கு முத்தம் வீசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் “கொலாப்ஸ் அண்ட் கிஸ்” என சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
சிலர் அவரது உடல்நலத்தைப் பற்றி கவலை தெரிவித்தாலும், மற்றொருபுறம் பலர் இது ‘நாடகம்’ என குற்றம் சாட்டி மீம்ஸ்கள், கருத்துக்கள், விவாதங்களை பரப்பி வருகின்றனர். “கேமரா முன் சோர்வாகவும் துன்பத்துடனும்… கேமரா பின் சிரிப்புடன் மலராக!” என ஒருவரின் பதிவு வைரலாகியுள்ளது.
. @AITCofficial MP Smt. Mahua Moitra (@MahuaMoitra) fell unconscious during the Opposition protest on SIR. LokSabha LoP Shri @RahulGandhi seen feeding water to Ms. Moitra. pic.twitter.com/aX0JIfIPc9
— Dipankar Kumar Das (@titu_dipankar) August 11, 2025
இந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது அல்லது திருத்தப்பட்டது என ஆதரவாளர்கள் சந்தேகித்த நிலையில், TMC மாநிலசபா எம்.பி. சாகரிகா கோஷ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இருப்பினும் மஹுவா மொய்த்ரா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. விசேஷ தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நடந்த இந்த போராட்டத்தில், பிற எம்.பிக்கள், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போலீஸ் பஸ்சில் இருந்தனர்.
