கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரை 2.88 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க Perplexity என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம் முன் வந்துள்ளது. கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் நம்பர் ஒன் ஆன்லைன் தேடுதல் சர்ச் இன்ஜினாக சட்டவிரோதமாக ஆதிக்கம் செலுத்துவாக கடந்த ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

ஸ்டார்ட் அப் நிறுவனமான Perplexity கூகுள் நிறுவனத்தை இந்தியா மதிப்பில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 1.50 லட்சம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் google நிறுவனம் குரோம் சர்ச் இன்ஜினை விற்பனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கூகுளின் இணைய ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று கருதுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Perplexityy-யின் சிஇஓ அரவிந்த் ஸ்ரீநிவாஸ் குரோமை ஒரு திறமையான மற்றும் சுதந்திரமான நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே குரோமை வாங்க 34.5 பில்லியன் அமெரிக்க டாலரை அறிவித்துள்ளதாக கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த விலை குறைவாக இருப்பதாக எண்ணிய கூகுள் நிறுவனம் இந்த விற்பனையை நிராகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் குரோமை விற்பனை செய்யும்படி கட்டாயப்படுத்தினால் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான குரோம் பயனர்கள் அமெரிக்காவிற்கு வெளியே உள்ளனர் என்பதையும் கூகுள் சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.