ஓடும் ரயிலில் இருந்து குதிப்பது மிகவும் ஆபத்தானது என்று ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்தாலும், சிலர் செய்யும் அலட்சியமான செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பெண்ணும் ஆணும் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ரயிலில் இருந்து இறங்க முயற்சி செய்து கீழே விழுந்து உருளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

முதலில் ஒரு பெண் தனது உடைமைகளுடன் ரயிலில் இருந்து குதிக்க, நிலைதடுமாறி நடைமேடையில் விழுகிறார். அவரைத் தொடர்ந்து ஒரு ஆணும் அதேபோல குதித்து பலத்த அடி வாங்குகிறார். நல்லவேளையாக இருவரும் ரயிலின் அடியில் சிக்காமல் உயிர் பிழைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.

இந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த பயனர், “ஓடும் ரயிலில் இருந்து குதிப்பது வீரமல்ல, அது முட்டாள்தனம்” என்று குறிப்பிட்டுள்ளார். ரயிலின் வேகத்தை உணராமல் ஒரு நிமிடம் காக்க பொறுமை இல்லாமல் செய்யும் இத்தகைய செயல்கள், வாழ்நாள் முழுமைக்கும் தீராத வலியைத் தந்துவிடும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

‘பாதுகாப்பான பயணமே புத்திசாலித்தனம்’ என்றும், ரயில் முழுமையாக நின்ற பிறகு இறங்குவதே உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது என்றும் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.