சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறுமி பயங்கரமான முதலையை மிக நெருக்கத்தில் அணுகி, அதன் மீது கை வைத்து அன்புடன் தடவிக் கொடுக்கிறாள். இதைப் பார்க்கும் எவருக்கும் நெஞ்சு படபடக்க வைக்கும் வகையில் அந்த காட்சி அமைந்துள்ளது.

மேலும் பொதுவாக மனிதர்களைக் கண்டால் தாக்கும் குணமுடைய முதலையிடம், எந்தவித பயமும் இன்றி அந்த சிறுமி காட்டிய பாசம் காண்போரை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அந்த சிறுமியின் தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Megáfono del Sureste (@megafonodelsureste)

“>

இருப்பினும், வனவிலங்குகளுடன் இத்தகைய ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். “சிறுமியின் துணிச்சலுக்கு சலாம்” என்று ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், பாதுகாப்பற்ற முறையில் இத்தகைய செயல்களைச் செய்வது தவறு என்ற கருத்தும் பரவலாக எழுந்து வருகிறது.