மகாராஷ்டிர மாநிலத்தில் ரத்த உறவுகளையே உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்றதால் ஆத்திரமடைந்த அவரது கொழுந்தன், தனது அண்ணன் மகள் கோரமாகக் கொலை செய்துள்ளார்.
மேலும் அந்தச் சிறுமி தனது அண்ணனுக்குப் பிறக்கவில்லை என்றும், அண்ணிக்கு வேறொருவருடன் இருந்த தொடர்பால் பிறந்த குழந்தை என்றும் சந்தேகப்பட்ட அந்த நபர், ஆத்திரத்தில் இத்தகைய கொடூரமான செயலைச் செய்துள்ளார். மனித நேயமற்ற இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்தில், அண்ணி காதலனுடன் சென்ற பிறகு தாள முடியாத கோபமடைந்த அந்த நபர், அந்த அப்பாவிச் சிறுமியைத் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார். குடும்பத்தின் கௌரவத்தைச் சிதைத்த கோபத்தை ஒரு பச்சிளம் குழந்தையிடம் காட்டியிருப்பது சமூக ஆர்வலர்களிடையே கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைக் கைது செய்யும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். கோபத்தில் மனிதன் எவ்வளவு மிருகமாக மாறக்கூடும் என்பதற்கு இந்தத் துயரச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
