அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த நிக் என்ற இளைஞர், தனது 1 லட்சம் டாலர் மதிப்பிலான செவர்லே கார்வெட் சொகுசு காரை 2,500 கிறிஸ்துமஸ் மின்விளக்குகளால் அலங்கரித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
சுமார் ஒன்பது மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, பச்சை நிற டேப்களைக் கொண்டு கார் முழுவதும் மின்விளக்குகளை ஒட்டி அவர் இந்த அலங்காரத்தைச் செய்துள்ளார். பகல் நேரத்தில் இந்த அலங்காரம் சாதாரணமாகத் தெரிந்தாலும், இரவு நேரங்களில் கார் வண்ணமயமாக ஜொலிப்பது வழிப்போக்கர்களையும் இணையவாசிகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.டிக்டாக்கில் @thenicklifts என்ற பெயரில் அவர் பதிவிட்ட இந்த வீடியோ, தற்போது பல மில்லியன் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
இருப்பினும், இந்த அதீத அலங்காரம் அவருக்கு சட்ட ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மாசசூசெட்ஸ் போக்குவரத்து சட்டப்படி, அவசர கால மற்றும் சேவை வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களில் ஒளிரும் அல்லது சுழலும் வண்ண விளக்குகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இது மற்ற ஓட்டுநர்களின் கவனத்தைச் சிதறடித்து விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், காவல்துறையினர் இதுபோன்ற மாற்றங்களை சட்டவிரோதமாகக் கருதுகின்றனர்.
<a href=”http://
Usually people just get a tree.
More here: https://t.co/keAvAhk0sV pic.twitter.com/tg0LPI20BX
— Supercar Blondie (@supercarblondie) December 25, 2025
“>
இதற்கிடையில், மற்றுமொரு சம்பவத்தில் ஆடம்பர பிஎம்டபிள்யூ (BMW) காரை கிறிஸ்துமஸ் அலங்காரத்துடன் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ஒருவர், சாலையில் காரை மோதி விபத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. பண்டிகைக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
