அம்மாவின் தொண்டனாக செங்கோட்டையன் பாராட்டு விழாவை புறக்கணித்தது சரியானதுதான் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “ஜெயலலிதாவின் படமும், எம்ஜிஆர் படமும் இடம்பெறாத காரணத்தால் அத்திக்கடவு- அவினாசி திட்ட பாராட்டு விழாவிற்கு நான் செல்லவில்லை என்று அம்மாவின் தொண்டனாக செங்கோட்டையன் கூறியது சரியானதுதான். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர் செங்கோட்டையன். அவரின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அதிமுகவை கேடயமாக பயன்படுத்திக்கொண்டு தன்னை காப்பாற்றிக் கொண்டு வருகிறார் எடப்பாடி. இதே நிலை நீட்டித்தால் 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்கு மூடு விழா நடத்தி விடுவார். பெரியார் போன்ற தலைவர்களை எல்லாம் சீமான் இழிவாக பேசுவது வெட்கக்கேடாக இருக்கிறது. ஆளுநர் தங்களுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பும்” என்று கூறியுள்ளார்
