என்னுடைய உணர்வுகளை நான் பகிர்ந்து கொண்டேன் என்று செங்கோட்டையன் பேசியுள்ளது எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாம்.
அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட முக்கியமானவர்கள் பங்கேற்றார்கள் இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டப்பட்டு அதில் பேசிய எடப்பாடி நான் யாருக்கும் அடிமை கிடையாது.
அதிமுக தான் நிறைய திட்டங்கள் கொண்டு வந்தது. திடீரென்று ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அதிமுகவின் திட்டங்களை அவர்கள் திட்டம் என்று காட்டிக் கொண்டார்கள். அதிமுக எந்த அளவிற்கு மக்களுக்காக சாதனையை செய்துள்ளது என்றெல்லாம் பேசினார். ஆனால் இந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணித்து இருந்தார். இது பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்தித்து பேசியது தான் எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம். அதாவது, எங்களை உருவாக்கிய முன்னாள் முதலமைச்சர்கள் ஆன எம் ஜி ஆர், ஜெயலலிதா அவர்கள் யாருடைய படங்களும் இந்த விழாவில் இல்லை. இப்படி பல காரணங்கள் இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று சொல்வதை விட என்னுடைய உணர்வுகளை நான் பகிர்ந்து கொண்டேன் என்று சொல்லி இருந்தார் செங்கோட்டையன். உணர்வுகளை நான் பகிர்ந்து கொண்டேன் என அவர் காரணம் கூறினாலும், உள்ளே பழைய பகை, தற்போதைய மன வருத்தங்கள் உள்ளன என்கிறார்களாம் மேற்கு மண்டல அதிமுகவினர். இதுதான் தற்போது எடப்பாடிக்கு உச்சகட்ட அதிர்ச்சியாக மாறி உள்ளதாம்.
