பொதுவாகவே பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதால், மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். பெரும்பாலும் நாம் பாம்புகள் குட்டி பறவைகளையும் கோழி முட்டைகளையும் சாப்பிடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஒரு நாகப்பாம்பு மற்றொரு பாம்பை விழுங்குவதை நாம் காணலாம். இந்த சம்பவம் மைசூரில் உள்ள போகடியில் நடந்துள்ளதாக தெரிகிறது. பாம்பு ஒன்று மற்றொரு பாம்பை விழுங்கும் வீடியோவை ஒருவர் இணையத்தில் பதிவிட்டு அது வைரலாகி வருகிறது.